ரஜினியை சந்தித்து ஆசிர்வாதம் பெற்ற மலையாள பிரபலம் ஜெயசூர்யா
ஜெயிலர் படத்தின் வெற்றியை தொடர்ந்து 170-வது படத்தில் நடிக்கவுள்ளார் ரஜினி. ஞானவேல் இயக்கும் இப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. படத்திற்கு அனிருத் இசை அமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு ஒரு சில நாட்களில் தொடங்கி நெல்லை, குமரி உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற உள்ளது. இப்படத்தில் மூன்று கதாநாயகிகள் ஒப்பந்தமாகி இருக்கின்றனர். துஷாரா விஜயன், மஞ்சு வாரியார், ரித்திகா சிங் ஆகியோர் படத்தில் நடிக்கின்றனர். இது தவிர, ராணா டகுபதி, ஃபகத் ஃபாசில் மற்றும் பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சனும் படத்தில் இணைந்துள்ளார்.
கேரளாவில் பூஜையுடன் படப்பிடிப்பு தொடங்கியுள்ளது. இந்நிலையில், படப்பிடிப்பு தளத்தில் ஏராளமான கேரள ரசிகர்கள் குவிந்து வருகின்றனர். மேலும், ஏராளமான கேரள திரைப்பிரபலங்களும் அவரை நேரில் சந்தித்து வருகின்றனர். அந்த வரிசையில், பிரபல மலையாள நடிகர் ஜெயசூர்யா ரஜினியை நேரில் சந்தித்து ஆசிர்வாதம் பெற்றார். மேலும், இந்த வாய்ப்பை ஏற்படுத்தி தந்த கன்னட நடிகர் ரிஷப் ஷெட்டிக்கு நன்றி எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.