தியேட்டரில் நடக்கும் தொடர் மர்ம கொலைகள்… மிரட்ட வருகிறது ‘MMOF’…

தியேட்டரில் நடக்கும்  தொடர் மர்ம கொலைகள்… மிரட்ட வருகிறது ‘MMOF’…

ஒரு நாளில் நடக்கும் திகில் சம்பவங்களை வைத்து உருவாக்கப்பட்டுள்ள ‘MMOF’ படம் விரைவில் வெளியாக உள்ளது.

தியேட்டரில் நடக்கும்  தொடர் மர்ம கொலைகள்… மிரட்ட வருகிறது ‘MMOF’…

தமிழில் சமர், சர்வம், அரிமா நம்பி உள்ளிட்ட படங்களில் நடித்தவர் ஜேடி. சக்கரவர்த்தி. இவர் தற்போது புதிய படம் ஒன்றில் ஹீரோவாக நடித்துள்ளார். ‘MMOF’ என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை என்.எஸ்.சி இயக்கியுள்ளார். ஒரு திரையரங்கில் ஒரு நாளில் நடக்கும் கதையை மையமாக வைத்து த்ரில்லராக இப்படம் உருவாகியுள்ளது.

தியேட்டரில் நடக்கும்  தொடர் மர்ம கொலைகள்… மிரட்ட வருகிறது ‘MMOF’…

இந்த படத்தின் ஹீரோயினாக அக்ஷதா நடித்துள்ளார். மேலும் ஸ்ரீராம் சந்திரா, மனோஜ் நந்தன், பேனர்ஜி, செம்மக் சந்திரா, க்ராக் ஆர். பி ஆகியோர் நடித்துள்ளனர். தமிழ், தெலுங்கு, கன்னடம் என மூன்று மொழிகளில் உருவாகியுள்ள இப்படத்தை திருமதி அனுஸ்ரீ வழங்கும் ஆர். ஆர். ஆர் நிறுவனம் மற்றும் ஜெகதீசன் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர்.

தியேட்டரில் நடக்கும்  தொடர் மர்ம கொலைகள்… மிரட்ட வருகிறது ‘MMOF’…

ஒரு திரையரங்கில் தொடர்ச்சியாக நடைபெறும் கொலைகளுக்கான காரணம் கண்டுபிடிக்கும் த்ரில்லர் படம்தான் இந்த படம். திகில் படமாக உருவாகியுள்ள இப்படம் ரசிகர்களை நிச்சயம் பயமுறுத்தும் என கூறப்படுகிறது. இந்த படத்திற்கான ஷூட்டிங் ஐதராபாத்தில் உள்ள திரையரங்கில் நடைபெற்று வந்தது. தற்போது ஷூட்டிங் முழுவதுமாக முடிக்கப்பட்டு இறுதிக்கட்ட தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. விரைவில் வெளியாக இருந்த இப்படம் கொரானா காரணமாக ரிலீசுக்கு காத்திருக்கிறது.

Share this story