‘ஜாக்சன்துரை இரண்டாம் அத்தியாயம்’ பஸ்ட்லுக் போஸ்ர் வெளியீடு.

photo

ஸ்ரீ கிரீன் புரொடக்ஷன் தயாரிப்பில்  கடந்த 2016ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘ஜாக்சன் துரை’.  சத்திய ராஜ், சிபிராஜ் இணைந்து நடித்த இந்த படத்தில் பிந்துமாதவி. கருணாகரன், ரஜேந்திரன், ஹாலிவுட் நடிகர் ஹாஜரி என பலர் நடித்திருந்தனர். இந்த நிலையில் படத்தின் இரண்டாம் அத்தியாயத்திற்கான ஃபஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது.

photo

அதில், சத்தியராஜ் மிடுக்கான உடை,கண்ணாடி என செம மாஸ்ஸாக உள்ளார். தூரத்தில் குதிரையில் சிபிராஜ் அமர்ந்திருப்பது போல போஸ்டர் வெளியாகியுள்ளது. முதல் அத்தியாயத்தை போன்றே இந்த பாகத்திற்கும் சித்தார்த் விபின் இசையமைக்கிறார். படம் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் வெளியாகவுள்ளது. ஏபிவி தரணிதரன் இயக்கும் இந்த படத்தில் யாரெல்லாம் இணைந்துள்ளனர், படத்தின் கதை முதல் பாகத்தின் தொடர்ச்சியாக இருக்குமா? என்பதெல்லாம் விரைவில் தெரியவரும்.

Share this story