ஜீத்து ஜோசப்பின் 'மிராஜ்' படப்பிடிப்பு நிறைவு...!

ஜீத்து ஜோசப் இயக்கத்தில் உருவாகி வந்த 'மிராஜ்' படப்பிடிப்பு நிறைவு பெற்றுள்ளது.
பிரபல மலையாள இயக்குனர் ஜீத்து ஜோசப்- ஆசிப் அலி கூட்டணியில் உருவாகி வரும் படம் 'மிராஜ்'. இந்த படத்தில் கதாநாயகியாக அபர்ணா பாலமுரளி நடித்துள்ளார். சண்டே ஹாலிடே, பி டெக், சமீபத்தில் வெளியான கிஷ்கிந்தா காண்டம் படங்களைத் தொடர்ந்து நான்காவது முறையாக ஆசிப் அலியுடன் ஜோடியாக நடித்திருக்கிறார் அபர்ணா பாலமுரளி. ஜன.,20ம் தேதி படப்பிடிப்பு துவங்கிய நிலையில் தற்போது 48 நாட்களில் இந்த படத்தின் படப்பிடிப்பை நடத்தி முடித்துள்ளார் ஜீத்து ஜோசப். இவர் ஏற்கனவே ஆசிப் அலியை வைத்து 'கூமன்' என்கிற படத்தை இயக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனையடுத்து, ஏற்கனவே அறிவிக்கப்பட்டபடி 'த்ரிஷ்யம்' படத்தில் மூன்றாம் பாகத்தின் வேலைகளை ஜீத்து ஜோசப் துவங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
Its Pack up for #Mirage 🔥🔥
— Arjun (@ArjunVcOnline) March 18, 2025
Soon in cinemas 👍🏻
A #JeethuJoseph film🎉#AsifAli #AparnaBalamuralipic.twitter.com/pQ3b3wGVqD