கார் விபத்தில் சிக்கிய ஜீவா
ஜீவா கடைசியாக தமிழில் வரலாறு முக்கியம் படத்தில் நடித்திருந்தார். இதையடுத்து தெலுங்கில் ஆந்திர முன்னாள் முதல்வர் ஜெகன்மோகனின் வாழ்க்கை வரலாறு படமான யாத்ரா 2 படத்தில் ஜெகன் மோகனாக நடித்தார். இதனைத் தொடர்ந்து தற்போது பிளாக் என்ற தலைப்பில் தமிழில் ஒரு படம் நடித்துள்ளார். இப்படம் ரிலீஸுக்கு தயாராகி வருகிறது.
இந்த நிலையில் ஜீவா கார் விபத்தில் சிக்கியுள்ளார். சென்னையில் இருந்து சேலத்திற்கு தனது மனைவியுடன் காரில் அவர் சென்றுள்ளார். அப்போது கள்ளக்க்குறிச்சி அருகே சின்ன சேலம் பகுதியில் சென்று கொண்டிருந்த போது இரு சக்கர வாகனம் குறுக்கே வந்ததாக கூறப்படுகிறது. அதனால் ஜீவாவின் கார் தடுப்புக்கட்டையில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்தில் ஜீவாவிற்கும் அவரது மனைவிக்கும் சிறிய காயம் ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது. இதையடுத்து விபத்துக்குள்ளான காரை சின்ன சேலம் போலீசார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே ஜீவா, மற்றொரு காரை ஏற்பாடு செய்து தனது மனைவுயுடன் சேலம் சென்றதாக தகவல் வெளியாகியுள்ளது.