"சென்சார் எனக்குதான் பிரச்னை செய்தது"-நடிகர் ஜீவா வெளியிட்ட தகவல்

jeeva
கண்ணன் ரவி குழுமம் சார்பில் கண்ணன் ரவி, தீபக் ரவி தயாரித்துள்ள படம், ‘தலைவர் தம்பி தலைமையில்’. நிதிஷ் சகாதேவ் எழுதி இயக்கியுள்ளார். ஜீவா, தம்பி ராமய்யா, ஜெய்வந்த், இளவரசு, பிரார்த்தனா நாதன் நடித்துள்ளனர். பப்லு அஜு ஒளிப்பதிவு செய்ய, விஷ்ணு விஜய் இசை அமைத்துள்ளார்.  இப்படம் குறித்து ஜீவா கூறியதாவது:
இப்படத்தில் அக்கம் பக்கத்திலுள்ள இரண்டு குடும்பங்களுக்கு இடையே ஏற்படும் பிரச்னையை, நான் நடுவராக இருந்து எப்படி தீர்க்கிறேன் என்பது கதை. நிதிஷ் சகாதேவ் இயக்கிய ‘ஃபாலமி’ என்ற படத்தில் பசில் ஜோசப் ஹீரோவாக அறிமுகமானார்.
அதற்கு பிறகு வெற்றிகரமான ஹீரோவாக உயர்ந்தார். இன்று நிதிஷ் சகாதேவ் இயக்கத்தில் நான் நடித்துள்ளேன்.  நான்தான் சென்சார் போர்டின் பிராண்ட் அம்பாசிடர். ராஜூ முருகன் இயக்கத்தில் நடித்த ‘ஜிப்ஸி’ படத்துக்கு 48 கட்டுகள் கொடுத்தனர். முதலில் சென்சார் எனக்குதான் பிரச்னை செய்தது.

Share this story