சூப்பர் ஸ்டாருக்கு தங்கையாக நடிக்கபோகும் பிரபல நடிகை – அதுவும் இந்த படத்திலா!.....
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்கு ஜோடியாக போகும் பிரபல நடிகை குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
இயக்குநரும், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மூத்த மகளுமான ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் “லால் சலாம்” எனும் திரைப்படத்தை இயக்கவுள்ளார். விஷ்ணு விஷால், விக்ராந்த் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கும் இந்தப் படத்தில் ரஜினிகாந்த் கேமியோ தோற்றத்தில் நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு மார்ச் மாதம் 7ஆம் தேதி சென்னையில் தொடங்க உள்ளது. இந்நிலையில் இதில் ரஜினிகாந்தின் தங்கையாக பழம்பெரும் நடிகை ஜீவிதா ராஜசேகர் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நடிகை ஜீவிதா 80களில் கொடிகட்டி பறந்தார். பின்னர் தெலுங்கில் பழம்பெரும் நடிகரான ராஜசேகரை திருமணம் செய்துகொண்டு நடிப்பதை கைவிட்டார். இவர் மீண்டும் கிட்டத்தட்ட 25ஆண்டுகளுக்கு பின்னர் சிமினாவிற்குள் எண்ரீ கொடுக்க உள்ளார், அதுவும் ரஜினிகாந்திற்கு ஜோடியாக. இந்த தகவல் லால்சலாம் படத்தின் மீதான எதிர்பார்பை அதிகரிக்க செய்துள்ளது.
ஐஸ்வர்யா இயக்க போகும் நான்காவது திரைப்படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. இதனை தொடர்ந்து படம் குறித்த அப்டேட்டுகள் அடுத்தடுத்து வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.