ராமாயணா படத்தில் இடம் பெரும் ராமர் சீதை நகைகள் -எப்படி வடிவமைக்கப்பட்டது தெரியுமா ?

ramayanam

நிதேஷ் திவாரி இயக்கத்தில் ரன்பீர் கபூர், சாய் பல்லவி, யஷ் நடித்துள்ள ‘ராமாயணா’ என்ற படத்தின் முதல் பாகம், வரும் 5ம் தேதி பல்வேறு மொழிகளில் திரைக்கு வருகிறது. இப்படத்தில் நடித்தவர்களுக்காக 4,500க்கும் மேற்பட்ட ஆபரணங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இதற்காக தனியார் நிறுவனத்தை சேர்ந்தவர்கள் 18 மாதங்களுக்கு மேல் கடுமையாக உழைத்துள்ளனர். இந்தியாவின் பழங்கால நகைகள், கோயில் சிற்பங்கள், புராணங்கள், பாரம்பரிய கலைகளை ஆய்வு செய்து ஆபரணங்கள் வடிவமைக்கப்பட்டன. படத்தில் ராமர், சீதை, ராவணன் ஆகிய கதாபாத்திரங்கள் வாழும் அயோத்தி, மிதிலை, இலங்கை ஆகிய ராஜ்ஜியங்களுக்கு தனித்துவமான நகை வடிவமைப்புகள் உருவாக்கப்பட்டன. அயோத்திக்கான ஆபரணங்களில் அரச கம்பீரம் வெளிப்படும் வகையில் பாரம்பரிய வடிவங்கள் பயன்படுத்தப்பட்டன.

ராமரின் சூரிய வம்சத்தை குறிக்கும் சூரியன் போன்ற வடிவங்கள் முக்கியத்துவம் பெற்றுள்ளன. சீதையின் நகைகளில் இயற்கை மற்றும் மலர் வடிவங்கள் இடம்பெற்றன.

Share this story