ஜெயமோகன் எழுதிய ‘ரத்த சாட்சி’... டிரெய்லரை வெளியிடும் மக்கள் செல்வன் !

Rathasaatchi

ஜெயமோகன் எழுதிய ‘ரத்த சாட்சி’ படமாக உருவாகியுள்ள நிலையில் அதன் டிரெய்லர் நாளை வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

தமிழின் முன்னணி எழுத்தாளராக இருப்பவர் ஜெயமோகன். சமீபத்தில் வெளியான ‘பொன்னியின் செல்வன்’, ‘வெந்து தணிந்தது காடு’ ஆகிய படங்களுக்கு வசனகர்த்தாவாகவும் பணியாற்றியுள்ளது. இவரது கதை மற்றும் சிறுகதைகள் மிகவும் பிரபலம். அதில் கைதிகள் என்ற சிறுகதை மிகவும் பிரபலம். 

Rathasaatchi

தற்போது இந்த ‘கைதிகள்’ சிறுகதை ரத்த சாட்சி என்ற பெயரில் திரைப்படமாக உருவாகி வருகிறது. இந்த கதையை மணிரத்னம், வெற்றிமாறன் ஆகிய இருவரும் திரைப்படமாக உருவாக்க முயற்சித்தனர். ஆனால் அதற்கு முன்னரே ரஃபீக் இஸ்மாயில் என்பவர் இந்த உரிமையை பெற்று தற்போது இயக்கியுள்ளார். 

இந்த படத்தில் கண்ணா ரவி, ஹரிஷ் குமார், இளங்கோ குமரவேல், கல்யாண் மாஸ்டர் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படத்தை ஆஹா தமிழ் ஓடிடியுடன் இணைந்து மகிழ் மன்றம் தயாரித்துள்ளது. இந்நிலையில் இப்படத்தின் ஃப்ர்ஸ்ட் லுக் போஸ்டரை நாளை மாலை 6 மணிக்கு நடிகர் விஜய் சேதுபதி வெளியிடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. 


 

Share this story