ஜெயராம், ஊர்வசி நடிக்கும் புது படம் -என்ன டைட்டில் தெரியுமா?

Director Pandiraj addressed Sasikumar as his life changer
விஜய் சேதுபதி, நித்யா மேனன் நடிப்பில் வெற்றிபெற்ற ‘தலைவன் தலைவி’ என்ற படத்தை தொடர்ந்து பாண்டிராஜ் இயக்கியுள்ள படம், ‘பரிமளா அண்ட் கோ’. இப்படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது. சஸ்பென்ஸ் திரில்லர் காமெடி ஃபேமிலி டிராமாவாக உருவாகியுள்ள இப்படம், பாண்டிராஜ் இயக்கியுள்ள 12வது படமாகும். சென்னையில் தொடங்கும் கதை, பிறகு கோயம்புத்தூரை கடந்து பாலக்காடு வரை பயணிக்கிறது.
ஜெயராம், ஊர்வசி, சந்தோஷ் சோபன், சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி, சாண்டி, அனந்திகா சனில்குமார், யோகி பாபு, மிஷ்கின், சிங்கம்புலி, பக்ஸ் நடித்துள்ளனர். லைகா புரொடக்‌ஷன்ஸ் சார்பில் சுபாஸ்கரன் தயாரித்துள்ளார். தமிழ்குமரன் புரொடக்‌ஷன்ஸ் பிரைவேட் லிமிடெட், பசங்க புரொடக்‌ஷன்ஸ் இணை தயாரிப்பு செய்துள்ளன.
ஜார்ஜ் சி.வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்ய, Foxn இசை அமைப்பாளராக அறிமுகமாகிறார். கதை, திரைக்கதை எழுதி பாண்டிராஜ் இயக்கியுள்ளார். பிரதீப் இ.ராகவ் எடிட்டிங் செய்ய, டி.ராமலிங்கம் அரங்கம் அமைத்துள்ளார். கலாய் கிங்ஸன் சண்டைப்பயிற்சி அளித்துள்ளார். சாண்டி, பாபா பாஸ்கர் நடனக்காட்சி அமைத்துள்ளனர்.

Share this story