ஜிகர்தண்டா 2 படத்தின் டீசர் ரிலீஸ்

ஜிகர்தண்டா 2 படத்தின் டீசர் ரிலீஸ்

ராகவா லாரன்ஸ் மற்றும் எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் உருவாகியிருக்கும் ஜிகர்தண்டா இரண்டாம் பாகத்தின் முன்னோட்டம் வெளியானது. 

கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் கடந்த 2014-ம் ஆண்டு வெளியான திரைப்படம் ஜிகர்தண்டா. மதுரையை களமாக கொண்டு உருவாகிய இப்படத்தில், சித்தார்த் கதாநாயகனாக நடித்திருந்தார். படத்தில் அவருக்கு ஜோடியாக லட்சுமி மேனன் நடித்திருந்தார். இப்படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் பாபி சிம்ஹா நடித்திருந்தார். இந்த படத்துக்காக 2014-ம் ஆண்டின் தேசிய விருதை பாபி சிம்ஹா பெற்றார். 8 வருடங்களுக்கு பிறகு ஜிகர்தண்டா படத்தின் இரண்டாம் பாகம் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் எஸ்.ஜே.சூர்யா மற்றும் ராகவா லாரன்ஸ் நடிக்கின்றனர். இப்படத்தின் முன்னோட்டம் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.

ஜிகர்தண்டா 2 திரைப்படம் வரும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
 

Share this story