‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’ படத்தின் முதல் விமர்சனத்தை பகிர்ந்த நடிகர் தனுஷ்.

photo

தீபாவளி ஸ்பெஷலாக வெளியாகவுள்ள ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’ படத்தை பார்த்துவிட்டு முதல் ஆளாக விமர்சனத்தை பகிர்ந்துள்ளார் நடிகர் தனுஷ்.

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தயாராகியுள்ள படம் ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’.  இந்தப்படம் நாளை தியேட்டரில் ரிலீஸ் ஆக உள்ளது. படத்தில் ராகவா லாரன்ஸ் , எஸ்.ஜே சூர்யா ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர். படத்தின் பாடல்கள், டீசர், டிரைலர் ஆகியவே வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்பை கூட்டிய நிலையில் தற்போது படத்தின் முதல் விமர்சனத்தை பகிர்ந்துள்ளார் நடிகர் தனுஷ்.  அதல்’ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படம் பார்த்தேன், கார்த்திக் சுப்புராஜின் அருமையான படைப்பு இது. எஸ்.ஜே சூர்யாவின் பிரம்மிப்பான நடிப்பை பார்ப்பது தொடர்கதையாகிவிட்டது. கடைசி 40 நிமிடங்கள் உங்கள் இதயத்தை கொள்ளைக்கொள்ளும், படக்குழுவுக்கு வாழ்த்துகள்” என பதிவிட்டுள்ளார்.

Share this story