இணையத்தை கலக்கும் ‘மாமதுர’ வீடியோ பாடல் வெளியீடு.
இணையத்தில் ட்ரெண்டாகியுள்ள ‘மாமதுர’ பாடலின் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.
கடந்த 2014ஆம் ஆண்டு கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில், நடிகர்களான சித்தார்த், பாபி சிம்ஹா, லெட்சுமி மேனன் ஆகியோர் நடித்து வெளியான படம் ‘ஜிகர்தண்டா’. படம் வெளியாகி விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் நீண்ட இடைவேளைக்கு பிறகு தற்போது ஜிகர்தண்டா படத்தின் 'ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்' என்ற பெயரில். இரண்டாம் பாகம் தயாராகியுள்ளது. இந்த படத்தையும் கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ளார். படம் நாளை தியேட்டரில் ரிலீஸ் ஆக உள்ளது. இந்த படத்தில் ராகவா லாரன்ஸ் , எஸ்.ஜே சூர்யா ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர். இந்த நிலையில் படத்தின் முதல் பாடலான ‘மாமதுர’ லிரிக்கல் வீடியோ ஏற்கனவே வெளியான நிலையில் தற்போது வீடியோ வெளியாகியுள்ளது.
அதில் ராகவா லாரன்ஸ் அடிதூளாக ஆடியுள்ளார். தொடர்ந்து படத்தின் சிறப்பு காட்சிக்கு அரசு அனுமதி கொடுத்துள்ள நிலையில் படத்தை தியேட்டரில் பார்க்க ரசிகர்கள் ஆவலாக உள்ளனர்.