‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’ படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!

photo

கார்த்திக் சுப்புராஜின் ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’ படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி எப்போது என்ற தகவல் வந்துள்ளது.

photo

இந்த ஆண்டு தீபாவளி வெளியீடாக கடந்த நவம்பர் 10ஆம் தேதி வெளியான படம் ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’. ராகவா லாரன்ஸ் மற்றும் எஸ். ஜே சூர்யா நடிப்பில் வெளியான இந்த படத்தில் இளவரசு, நிமிஷா சஜயன், சஞ்சனா நடராஜன் ஆகியோர் நடித்திருந்தனர். ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்ற இந்த படம் உலக அளவில் இதுவரை ரூ.70  கோடிவரை வசூலித்துள்ளது.

photo

இந்த நிலையில் படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி படம் வரும் டிசம்பர் 8ஆம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் தமிழ், மலையாளம், இந்தி, கன்னடம், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் வெளியாகவுள்ளது, இது தொடர்பான போஸ்டர் வெளியாகியுள்ளது.

Share this story