சரவெடியாய் வெடிக்கப்போகும் ‘ஜிகர்தண்டா டவுள் எக்ஸ்’... ரிலீஸ் தேதி அறிவிப்பு !

Jigarthanda DoubleX

 கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகும் ‘ஜிகர்தாண்ட டபுள் எக்ஸ்’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

வித்தியாசமான கேங்ஸ்டர் திரைப்படமாக உருவாகி கடந்த கடந்த 2014-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘ஜிகர்தண்டா’. கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளியான இப்படம் நல்ல விமர்சனங்களை பெற்றது.  தற்போது 8 ஆண்டுகள் கழித்து ‘ஜிகர்தண்டா’ படத்தின் இரண்டாம் பாகத்தை கார்த்திக் சுப்புராஜ் எடுத்து வருகிறார். 

Jigarthanda DoubleX

‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’ என்ற தலைப்பில் உருவாகும் இந்த படத்தில் ராகவா லாரன்ஸ் ஹீரோவாகவும், இயக்குனர் எஸ்.ஜே‌.சூர்யா  வில்லனாகவும் நடித்துள்ளனர்.  நடிகை நிமிஷா சஜயன் கதாநாயகியாக நடித்துள்ளார். இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்து வருகிறார். கடந்த ஆண்டு மதுரையில் தொடங்கிய இந்த படத்தின் படப்பிடிப்பு 36 நாட்களில் ஒரே கட்டமாக நிறைவுபெற்றது. 

Jigarthanda DoubleX

 சமீபத்தில் இப்படத்தின் டைட்டில் டீசர் வெளியாகி படத்திற்கான எதிர்பார்ப்பை கூட்டியுள்ளது. இந்நிலையில் தற்போது இறுதிக்கட்ட தயாரிப்பு பணியில் உள்ள இப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இப்படம் வரும் தீபாவளிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதையொட்டி சரவெடியாய் வெடிக்கும் கிளிம்ப்ஸ் வீடியோ ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. இந்த படம் தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 


 

Share this story