இந்திய சர்வதேச திரைப்பட விழாவிற்கு தேர்வான ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ராகவா லாரன்ஸ், எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்ட பலர் நடித்த ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’ 55வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவிற்கு தேர்வாகியுள்ளது. இந்திய சர்வதேச திரைப்பட விழாவிற்கு கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளியான ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’ திரைப்படம் தேர்வாகியுள்ளது. இந்திய சினிமாவை ஊக்குவிக்கும் வகையில், சர்வதேச திரைப்பட விழா கடந்த 1978ஆம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வருகிறது. இந்த வருடம் சர்வதேச திரைப்பட விழா வரும் நவம்பர் 20ஆம் தேதி முதல் 28ஆம் தேதி வரை கோவாவில் நடைபெறுகிறது.
இந்த திரைப்பட விழாவில் பிரபல பாலிவுட் நடிகர் நடித்த ’சாவர்க்கர்’ திரைப்படம் திரையிடப்படுகிறது. மேலும் இந்திய பனோரமா பிரிவில் 25 படங்கள் தேர்வாகியுள்ளது. இந்திய பனோரமா பிரிவு (வணிகம் சார்ந்த திரைப்படம்) ஜிகர்தண்டா டபுள் எக்ஸ், கல்கி 2898 AD, மஞ்சும்மல் பாய்ஸ், ஆடுஜீவிதம், 35 சின்ன கதா காடு உள்ளிட்ட படங்கள் தேர்வாகியுள்ளன. இந்த தேர்வில் மொத்தம் 384 திரைப்படங்கள் பங்கேற்றன.
#JigarthandaDoubleX @ 55th #IFFIIndianPanorama 2024 🙏🏼🙏🏼 pic.twitter.com/6wWcrQ7aKb
— karthik subbaraj (@karthiksubbaraj) October 25, 2024
வணிக அம்சம் இல்லாத திரைப்படங்கள் பிரிவில் 20 படங்கள் தேர்வாகியுள்ளது. இந்த தேர்வில் மொத்தம் 262 திரைப்படங்கள் பங்கேற்றன. IFFI என அழைக்கப்படும் இந்திய சர்வதேச திரைப்பட விழாவிற்கு தேர்வாகியுள்ள ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’ திரைப்படத்தில் ராகவா லாரன்ஸ், எஸ்.ஜே.சூர்யா, நிமிஷா சஜயன் உள்ளிட்ட பலர் நடித்து கடந்த வருடம் தீபாவளி பண்டிகைக்கு வெளியானது.
சினிமாவை கருவியாக பயன்படுத்தி காடுகள், விலங்குகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதும், சினிமா என்ற ஒரு ஊடகம் மனிதனை எந்த அளவு வசீகரிக்கிறது என்பதை கதைக்கருவாக கொண்டு உருவாக்கப்பட்டிருந்தது. இந்த திரைப்படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் மிகப்பெரும் வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.