ரசிகர்கள் ரெடியா இருங்க.. இன்று மாலை வெளியாகிறது ‘ஜிகர்தண்டா 2‘ முக்கிய அப்டேட்

JigarthandaDoubleX

‘ஜிகர்தண்டா 2’ படத்தின் முக்கிய அப்டேட் இன்று மாலை வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

கடந்த கடந்த 2014-ஆம் ஆண்டு கார்த்திக் சுப்புராஜின் வித்தியாசமான கேங்ஸ்டர் படங்களில் ஒன்று ‘ஜிகர்தண்டா’. இந்த படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு அதன் இரண்டாம் பாகத்தை 8 ஆண்டுகள் கழித்து கார்த்திக் சுப்புராஜ் எடுத்து வருகிறார். கடந்த ஆண்டு இப்படத்தின் அறிவிப்பு வெளியான நிலையில் தற்போது மதுரையில் இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 

JigarthandaDoubleX

இந்த படத்தில் ராகவா லாரன்ஸ் மற்றும் எஸ்.ஜே‌.சூர்யா ஆகிய இருவரும் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.  நிமிஷா சஜயன் கதாநாயகியாக நடித்து வருகிறார். சமீபத்தில் இப்படத்தின் டைட்டில் டீசர் வெளியாகி படத்திற்கான எதிர்பார்ப்பை கூட்டியுள்ளது.

இந்நிலையில் இப்படத்தின் முக்கிய அப்டேட் இன்று மாலை வெளியாகும் என படக்குழுவினர் அறிவித்துள்ளனர். அது என்ன மாதிரியான அப்டேட்டாக இருக்கும் என கொலைவெறியுடன் ரசிகர்கள் காத்திருக்கின்றனர். 

Share this story