‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’ படத்தின் லேட்டஸ்ட் தகவல்.

photo

எஸ். ஜே சூர்யா மற்றும் ராகவா லாரன்ஸ் நடிப்பில் தயாராகியுள்ள ‘ஜிகர்தண்டா டபுல் எக்ஸ்’ படத்தின் ஃபஸ்ட் சிங்கிள் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

photo

சித்தார்த், பாபி சிம்ஹா, லெட்சுமி மேனன் ஆகியோர் நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் கடந்த 2014ஆம் ஆண்டு வெளியான படம் ‘ஜிகர்தண்டா’ இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வசூலில் பட்டையை கிளப்பியது. தொடர்ந்து படத்தின் இரண்டாம் பாகமான ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’ படம் தற்போது தயாராகியுள்ளது. இந்த படத்தையும் முதல் பாகத்தை இயக்கிய கார்த்திக் சுப்புராஜ் தான் இயக்குகிறார். மேலும் படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். வரும் தீபாவளியை முன்னிட்டு வெளியாகவுள்ள இந்த படத்தின் ஃபஸ்ட் சிங்கிள் குறித்த அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது.

photo

அதாவது படத்தின் முதல் பாடலான ‘மாமதுர’ பாடல் வரும் 9அம் தேதி மதியம் 12.12 மணிக்கு வெளியாகும் என அறிவித்து படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

Share this story