இணையத்தில் தீயாக பரவும் ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’ படத்தின் மேக்கிங் வீடியோ!

தீபாவளி ஸ்பெஷலாக வரவுள்ள ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’ படத்தின் மேக்கிங் வீடியோ வெளியாகி இணையத்தில் தீயாக பரவி வருகிறது.
கடந்த 2014ஆம் ஆண்டு கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில், நடிகர்களான சித்தார்த், பாபி சிம்ஹா, லெட்சுமி மேனன் ஆகியோர் நடித்து வெளியான படம் ‘ஜிகர்தண்டா’. படம் வெளியாகி விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் நீண்ட இடைவேளைக்கு பிறகு தற்போது ஜிகர்தண்டா படத்தின் இரண்டாம் பாகம் தயாராகியுள்ளது. இந்த பாகத்திற்கு ஜிகர்தண்டா பபுள் எக்ஸ் என பெயரிட்டுள்ளனர். இதில் நடிகர்களான ராகவாலாரன்ஸ், எஸ் ஜே சூர்யா ஆகியோர் நடித்துள்ளனர். வரும் தீபாவளியை முன்னிட்டு படம் 10ஆம் தேதி வெளியாகவுள்ளது. படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார், ஏற்கனவே படத்தின் டீசர், பாடல்கள், டிரைலர் ஆகியவை வெளியான நிலையில் தற்போது படத்தின் மேக்கிங் வீடியோ வெளியாகியுள்ளது. அதை பார்க்கும்போதே படக்குழு எவ்வளவு கஷ்டப்பட்டு காடு, மலை என பார்க்காமல் உழைத்துள்ளனர் என தெரிகிறது.
Get behind the scenes of #JigarthandaDoubleX 🔥
— Stone Bench (@stonebenchers) November 7, 2023
Making Video ▶️ https://t.co/YyYLGR5u4O#DoubleXDiwali in theatres, from November 10th! @karthiksubbaraj @offl_Lawrence @iam_SJSuryah @dop_tirru @Music_Santhosh @kaarthekeyens @stonebenchers #AlankarPandian #InvenioOrigin… pic.twitter.com/QXpsabteQm