ஜீவா நடிக்கும் ‘கோல்மால்’ படத்தின் கலர்ஃபுல் போஸ்டர் வெளியீடு.

ஜாகுவர் ஸ்டூடியோஸ் தயாரிப்பில், இயக்குநர் பொன் குமார் இயக்கத்தில் நடிகர் ஜீவா, மிர்ச்சி சிவா ஆகியோர் இணைந்து நடித்திருக்கும் திரைப்படம் ‘கோல்மால்’. இவர்களோடு இணைந்து இந்த படத்தில் சிவா, தன்யா, யோகி பாபு, பயல் ராஜ்புட் ஆகியோர் நடித்துள்ளனர்.
காமெடி கதைக்களத்தில் தயாரகியுள்ள இந்த படம் கடந்த செப்டம்பர் மாதமே வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தவிர்க முடியாத காரணத்தால் படம் ரிலீஸ்ஸாகவில்லை. இந்த நிலையில் படக்குழு ஜீவாவின் பிறந்தநாளை முன்னிட்டு இன்று ஒரு போஸ்டரை வெளியிட்டுள்ளனர். அந்த போஸ்டரில் ஜீவா தலையில் கௌபாய் தொப்பியுடன் வலங்குகள் நிறைந்த வனத்திற்கு நடுவே செல்வதுபோல கலர்ஃபுல்லான போஸ்டரை வெளியிட்டுள்ளனர்.
பொன்குமரனிற்கு இதுதான் முதல் படம் என்றாலும் கூட தமிழ், கன்னட படங்களில் உதவி இயக்குநராக பணியாற்றியுள்ளார்.அதுமட்டுமல்லாமல் லிங்கா படத்தின் கதையை எழுதியவர்தான் இந்த படத்திற்கும் கதையொழுதியுள்ளார் எனபது குறிப்பிடத்தக்கது. விரைவில் படம் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.