ஜீவா - பிரியா பவானி சங்கரின் ‘பிளாக்’ அக்.11-ல் ரிலீஸ்!

black

ஜீவா - பிரியா பவானி சங்கர் நடித்துள்ள ‘பிளாக்’ திரைப்படம் வரும் அக்டோபர் 11-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. கே.ஜி.பாலசுப்ரமணி இயக்கத்தில் ஜீவா நடித்துள்ள திரைப்படம் ‘பிளாக்’. பொட்டன்ஷியல் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்தில் பிரியா பவானி ஷங்கர் நாயகியாக நடித்துள்ளார். மேலும், விவேக் பிரசன்னா, யோக் ஜபீ, ஷாரா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். படத்துக்கு சாம் சி.எஸ் இசையமைத்துள்ளார். அண்மையில் இந்தப் படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. ஒரு வீடு இரண்டு கதாபாத்திரங்கள் அங்கு நடக்கும் சம்பவங்கள் என திகிலுடன் சுவாரஸ்யமாக இருந்த ட்ரெய்லர் படத்தின் மீது நம்பிக்கை ஏற்படுத்தியது.

இந்நிலையில் இந்தப் படம் வரும் அக்டோபர் 11-ம் தேதி திரைக்கு வருகிறது. முன்னதாக அக்டோபர் 10-ம் தேதி ரஜினியின் ‘வேட்டையன்’ திரைப்படம் திரைக்கு வர உள்ளது குறிப்பிடத்தக்கது. 2 படங்களும், ஆயுத பூஜை விடுமுறை தினங்களை முன்னிட்டு வெளியிடப்பட உள்ளன.

Share this story