ஜீவா நடித்த அகத்தியா படத்தின் டைட்டில் லுக் அப்டேட்

jiva

தமிழ் சினிமாவில் முன்னணி தயாரிப்பு நிறுவனத்தில் வேல்ஸ் பிலிம் தயாரிப்பு நிறுவனம் முக்கியமானது. இவரது தயாரித்த தேவி, தேவி 2, கோமாளி, LKG, மூக்குத்தி அம்மன் போன்ற திரைப்படங்கள் மாபெரும் வெற்றியைப் பெற்றது. தற்பொழுது வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல் சுந்தர் சி இயக்கத்தில் மூக்குத்தி அம்மன் 2, சுமோ, ஜெயம் ரவி நடிக்கும் ஜீனி போன்ற திரைப்படங்களை தயாரித்து வருகிறது. வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனலின் அடுத்து தயாரிக்கப்போகும் படத்தை பற்றிய அறிவிப்பை சில மாதங்களுக்கு முன் வெளியிட்டது. படத்திற்கு அகத்தியா என்ற தலைப்பை வைத்துள்ளனர். இப்படத்தை பா. விஜய் இயக்கியுள்ளார். ஜீவா, அர்ஜூன் மற்றும் ராஷி கன்னா முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.

jiiva
இது மிகப்பெரிய பொருட் செலவில் தயாரிக்கப்பட்டுள்ளது. இது ஒரு பீரியட் ஃபேண்டசி டிராமா கதைக்களத்துடன் அமைந்திருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. படத்தின் இசையை யுவன் ஷங்கர் ராஜா மேற்கொண்டுள்ளார். இந்நிலையில் படத்தின் டைட்டில் லுக் மற்றும் படத்தின் ரிலீஸ் தேதியை இன்று மாலை 5 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

Share this story