ஜீவா நடித்த 'அகத்தியா' பட டீசர் வெளியீடு
ஜீவாவின் ‘அகத்தியா’ படம் வரும் 31ம் தேதி வெளியாகிறது.'ஆசை ஆசையாய்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் ஜீவா. இவர் 'சிவா மனசுல சக்தி, கற்றது தமிழ், கொரில்லா, ரவுத்திரம், கலகலப்பு 2 போன்ற படங்களில் நடித்து தனக்கென ரசிகர்களை உருவாக்கி வைத்துள்ளார். கடைசியாக இவர் பிளாக் படத்தில் நடித்திருந்தார். இப்படத்தையடுத்து ஜீவா, பா.விஜய் இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்கிறார். இதில் அர்ஜுன், ராஷி கன்னா, யோகி பாபு, விடிவி கணேஷ் மற்றும் ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
Unveiling the fear and mystery, the #Aghathiyaa teaser promises a spine-chilling journey into the realm of Fantasy-Horror Thriller!
— Vels Film International (@VelsFilmIntl) January 3, 2025
Tamil - https://t.co/nqGqKqvJXI
Telugu - https://t.co/tvqUqXN1Yj
Hindi - https://t.co/oFLHAmsUEi #Aghathiyaa in cinemas January 31st.… pic.twitter.com/YG7HY8rTHg
வேல்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். இப்படத்திற்கு அகத்தியா என்ற தலைப்பை வைத்துள்ளனர். இந்த படம் வரும் 31ம் தேதி தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. இந்நிலையில் இப்படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது.