இந்தியா - பாகிஸ்தான் மேட்ச்-ஐ நேரில் கண்டுகளித்த நடிகர் ஜீவா, வெங்கட் பிரபு
1740329628999

பாகிஸ்தான் மற்றும் துபாயில் 9-வது ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது.
இந்த தொடரின் 5-வது லீக் போட்டி துபாயில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இப்போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 49.4 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 241 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இந்நிலையில், இப்போட்டியை நடிகர் ஜீவா மற்றும் இயக்குனர் வெங்கட் பிரபு நேரில் கண்டு ரசித்தனர்.