பா.விஜய் இயக்கத்தில் ஜீவா நடிக்கும் ‘அகத்தியா’ முதல் தோற்றம் வெளியீடு!
1728382543000
பா.விஜய் இயக்கத்தில் ஜீவா நடிக்கும் ‘அகத்தியா’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. கடந்த 2015-ம் ஆண்டு வெளியான ‘ஸ்ட்ராபெர்ரி’ படத்தின் மூலம் பாடலாசிரியர் பா.விஜய் இயக்குநராக அறிமுகமானார். இந்தப் படத்தைத் தொடர்ந்து 2018-ல் வெளியான ‘ஆருத்ரா’ படத்தை இயக்கினார். இரண்டு படங்களிலும் அவரே நடித்தார். அடுத்து அவர் ஜீவாவை வைத்து ‘அகத்தியா’ படத்தை இயக்கியுள்ளார். இந்தப் படத்தில் ராஷி கண்ணா, அர்ஜூன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் சார்பில் ஐசரி கணேஷ் படத்தை தயாரித்துள்ளார்.
நீண்ட நாட்களாக படம் குறித்த அப்டேட் இல்லாமல் இருந்த நிலையில், தற்போது படக்குழு படத்தின் முதல் தோற்றத்தை வெளியிட்டுள்ளது. போஸ்டரை பொறுத்தவரை கையில் தீப்பந்தம் ஏந்திக்கொண்டு ஜீவா நின்றுகொண்டிருக்கிறார். அர்ஜூன், ராஷி கண்ணா ஆகியோர் திகைப்புடன் காணப்படுகின்றனர். படம் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் வெளியாக உள்ளது. படத்தின் வெளியீட்டு தேதி அறிவிக்கப்படவில்லை.
A Battle to Unbury The Mystery! A Journey to Redeem the Lost Glory💫! Here's the First Look of #Aghathiyaa
— Vels Film International (@VelsFilmIntl) October 7, 2024
A @pavijaypoet Mystery 💥
A @thisisysr Musical ✨@IshariKGanesh @VelsFilmIntl @WamIndia @JiivaOfficial #Arjun #RaashiKhanna #Edwardsonnanblick @iYogiBabu #VtvGanesh… pic.twitter.com/BDLcPozMcZ