‘தக் லைஃப்’ படத்தின் ‘ஜிங்குச்சா’ பாடல் வெளியானது !

கமல் நடிப்பில் உருவாகியுள்ள ‘தக் லைஃப்’ படத்தின் முதல் பாடலான ‘ஜிங்குச்சா’ பாடல் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
மணிரத்னம் இயக்கத்தில் கமல் நடிப்பில் உருவாகிவரும் திரைப்படம் ‘தக் லைஃப்’. இந்தப் படத்தில் த்ரிஷா, சிம்பு, அபிராமி, அசோக் செல்வன், ஜோஜூ ஜார்ஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.படத்தை ராஜ் கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்நிலையில் இந்தப் படத்தின் முதல் பாடலான ‘ஜிங்குச்சா’ பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்தப் பாடலை கமல் எழுதியுள்ளார். வைஷாலி சமந்த், சக்திஸ்ரீ கோபாலன் & ஆதித்யா ஆர்.கே உள்ளிட்டோர் இணைந்து பாடியுள்ளனர்.
#Jinguchaa Out Nowhttps://t.co/1pnunHg2Pv #Thuglife#Thugsweddinganthem#ThuglifeFromJune5 #KamalHaasan #SilambarasanTR
— Kamal Haasan (@ikamalhaasan) April 18, 2025
A #ManiRatnam Film
An @arrahman Musical
A @ikamalhaasan Lyrical
@SilambarasanTR_ #Mahendran @bagapath @trishtrashers @AishuL_ @AshokSelvan… pic.twitter.com/n30ktLvKn6
கல்யாணக் கொண்டாட்டம் என்னும் விறுவிறுப்பான பின்னணியில், கமல் ஹாசனும், சிலம்பரசனும், இணைந்து ஆடியிருக்கும் இந்தப் பாடல், ரஹ்மானுக்கே உரித்தான பாணியில் அமைந்திருக்கிறது. துள்ளலான இந்தப் பாடல் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. பாடலின் இறுதியில் கமல்ஹாசனும் - சிம்புவும் இணைந்து ஆடும் நடனம் ரசிகர்களை ஈர்த்துள்ளது.