இணைந்தது ஜியோ சினிமா & டிஸ்னி+ ஹாட்ஸ்டார்... இனி புதிய பரிணாமத்தில் ஜியோஹாட்ஸ்டார்

jio

ஜியோ மற்றும் ஹாட்ஸ்டார் நிறுவனங்கள் ஒன்றாக இணைவதாகக் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அறிவிப்பு வெளியானது. இதற்கிடையே இரு நிறுவன இணைப்பு வெற்றிகரமாக முடிந்துவிட்ட நிலையில், தற்போது ஜியோ ஹாட்ஸ்டார் என்ற புதிய தளமும், இதற்கான ஓடிடி தளமும் இப்போது வெளியிடப்பட்டுள்ளது. 


 நமது நாட்டின் டாப் ஓடிடி தளங்களாக இருந்தவை டிஸ்னி+ ஹாட்ஸ்டார் மற்றும் ஜியோசினிமா. ஐபிஎல் மற்றும் கிரிக்கெட் போட்டி ஒளிபரப்பு உரிமை இருந்தவரை டிஸ்னி கொடிகட்டிப் பறந்தது. டிஸ்னி மற்றும் ஜியோ ஆனால், எப்போது ஐபிஎல் ஓடிடி உரிமங்கள் டிஸ்னி கையைவிட்டுப் போனதோ.. அப்போது முதலே ஹாட்ஸ்டார் சந்தாதாரர்கள் எண்ணிக்கை கடுமையாக குறைந்தது. இதனால் வேறு வழியின்றி ஜியோ சினிமாஸ் உடன் டிஸ்னி இணைந்தது. கடந்தாண்டே இந்த ஒப்பந்தம் நிறைவடைந்த போதிலும், கடந்த பல மாதங்களாக இரு செயலிகளும் தனித்தனியாகவே இயங்கி வந்தன.  இதற்கிடையே நீண்ட காலத்திற்குப் பிறகு இப்போது ஜியோசினிமா மற்றும் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் ஒன்றாக இணைந்துள்ளது.

jio

 

இந்த புதிய ஸ்ட்ரீமிங் தளம் ஜியோஹாட்ஸ்டார் என்று அழைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.. அதன்படி இனிமேல் இருவேறு தங்களில் இருந்த ஓடிடி கன்டெண்டுகள் அனைத்தும் இனி ஒரே இடத்தில் ஸ்ட்ரீம் ஆகும்.. Viacom18 மற்றும் ஸ்டார் இந்தியா இணைப்பிற்குப் பிறகு கடந்த நவம்பர் மாதம் ஜியோஸ்டார் உருவாக்கப்பட்ட நிலையில், இப்போது அதற்கான செயலி லான்ச் செய்யப்பட்டுள்ளது.  இந்த புதிய ஜியோ ஹாட்ஸ்டார் தளத்தில் மொத்தம் சுமார் 300,000 மணிநேர வீடியோக்கள் மற்றும் லீவ் ஸ்ட்ரீமிங் இருக்கும் எனக் கூறப்பட்டுள்ளது. இரு ஓடிடி தளங்களின் இணைப்பிற்குப் பிறகு மொத்த பயனர் எண்ணிக்கை 50 கோடிக்கும் அதிகமாக இருக்கும் என கூறப்பட்டுள்ளது.jio

. இருப்பினும், ஜியோ மற்றும் ஹாட்ஸ்டார் என இரண்டிலும் சந்தாதாரராக இருக்கும் கணக்குகளை நீக்கிவிட்டு வரும் கணக்கா, இல்லை மொத்த கணக்கா என்பது தெளிவுபடுத்தப்படவில்லை. கட்டணம் செலுத்த வேண்டுமா: இதற்காக புதிய செயலி எதுவும் வெளியிடப்படவில்லை. டிஸ்னி+ ஹாட்ஸ்டார் செயலி தான் ஜியோ ஹாட்ஸ்டார் என்று மாற்றப்பட்டுள்ளது. இதற்கான அப்டேட் இன்று வெளியானது. அதன்படி ஹாட்ஸ்டார் வைத்திருக்கும் நபர்கள் அதை அப்டேட் செய்தால் ஜியோ ஹாட்ஸ்டார் என மாறும். தற்போது ஜியோ ஹாட்ஸ்டாரை அனைவரும் இலவசமாகப் பார்க்கும் வகையிலேயே இருக்கிறது.


ஐபிஎல் உள்ளிட்ட அனைத்து வகையான ஸ்டிரீமிங் சேவைகளையும் தற்போது இலவசமாகவே பார்த்துக் கொள்ளலாம். அதாவது இலவசமாகப் பார்ப்போருக்கு விளம்பரங்களுடன் வீடியோ வரும். அதேநேரம் சந்தா கட்டி பார்ப்போருக்கு விளம்பரங்கள் எதுவும் வராது என்பது போலவே தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பணம் கட்டி பார்ப்போர் தரமான குவாலிட்டியில் (higher resolution) வீடியோவை பார்க்கலாம். எவ்வளவு இருக்கும்: மேலும், தற்போது ஜியோ சினிமாஸ் அல்லது ஹாட்ஸ்டார் சந்தா வைத்திருப்போர் தானாக ஜியோ ஹாட்ஸ்டாருக்கு எடுத்துச் செல்லப்படுவார்கள். அவர்கள் தங்கள் சந்தா காலம் முடியும் வரை கூடுதல் கட்டணம் செலுத்தத் தேவையில்லை. அதேநேரம் புதிய சந்தாதாரர்களுக்கு ரூ. 149 முதல் பல்வேறு பிளான்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
 

Share this story