அம்பானியின் ‘ஜியோ வேர்ல்டு பிளாசா’ திறப்பு விழா- ஜோடிகளுடன் கலக்கும் குயின்ஸ்.

photo

முன்பையில் மிக பிரம்மாண்டமான மற்றும் பெரிய மால் ஒன்றை அம்பானி நேற்று திறந்துள்ளார். அதற்கு ‘ஜியோ வேர்ல்டு பிளாசா’ என பெயரிட்டுள்ளனர். அதற்காக ஏகப்பட்ட பிரபலங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. பலரும் தங்களது ஜோடிகளுடன் கலந்துகொண்டு விழாவை மேலும் அழகாக்கியுள்ளனர். இது தொடர்பான புகைப்படம் வெளியாகி ரசிகர்களை ரசிக்க வைத்துள்ளது.

photo

சமீபத்தில் திருமணமான நடிகை ஹன்சிகா தனது கணவரான சோஹைல் கத்தூரியாவுடன் கலந்துகொண்டுள்ளார்.

photo

காஜல் அகர்வால் தனது கணவரான கவுதம் கிச்சிலுவுடன் கலந்துகொண்டு அழகிய புகைப்படமும் எடுத்துக்கொண்டார்.

photo

தொடர்ந்து கமல்ஹாசனின் மூத்த மகளான ஸ்ருதி ஹாசன் தனது காதலரான சந்தனுவுடன் கலந்துக்கொண்டுள்ளார்.

photo

அடுத்ததாக விரைவில் திருமண பந்தத்தில் இணையவுள்ள நடிகை தமன்னா தனது காதலர் விஜய் வர்மாவுடன் ஜோடியாக கலந்துக்கொண்டுள்ளார்.

photo

நடிகை ஜெனிலியா தனது கணவரான ரிதேஷ் உடன் கலந்துகொண்டுள்ளார்.

 

Share this story