தனது மகன், மனைவியுடன் நடிகர் ஜாக் கொக்கன்.. க்யூட் லுக்கில் இருக்கும் புகைப்படம் வைரல் !

தனது அழகிய குடும்பத்துடன் இருக்கும் புகைப்படங்களை நடிகர் ஜான் கொக்கன் வெளியிட்டுள்ளார்.
தமிழில் ‘சார்பட்டா பரம்பரை’ படத்தில் வில்லனாக நடித்து பிரபலமானவர் நடிகர் ஜான் கொக்கன். மலையாளத்தில் ஏராளமான திரைப்படத்தில் நடித்து ரசிகர்களின் கவனம் ஈர்த்தார். அதன்பிறகு தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் நடிக்க தொடங்கினார். ‘பாகுபலி’, ‘துணிவு’, ‘கப்ஸா’, ‘வீரசிம்ஹா ரெட்டி’ உள்ளிட்ட படங்களில் வில்லனாக நடித்துள்ளார்.
இதற்கிடையே கடந்த 2019-ஆம் ஆண்டு பிரபல விஜே பூஜாவை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். தமிழில் பிரபல விஜேவாக இருக்கும் பூஜா, விஜய் டிவி உள்ளிட்ட முன்னணி தொலைக்காட்சிகளில் பணியாற்றியவர். திருமணத்திற்கு கணவர் ஜான் கொக்கனுடன் மகிழ்ச்சியாக இருந்து வருகிறார். இதையடுத்து கடந்த ஏப்ரல் மாதம் தங்களுக்கு ஆண் குழந்தை பிறந்ததாக நடிகர் ஜான் கொக்கன் அறிவித்திருந்தார்.
இந்நிலையில் தனது மனைவி மற்றும் மகன் கியான் கொக்கனுடன் இருக்கும் புகைப்படம் ஒன்றை ஜான் கொக்கன் வெளியிட்டுள்ளார். க்யூட் லுக்கில் இருக்கும் அந்த குடும்ப புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.