பாலிவுட் வெப்தொடரில் கமிட்டான ஜோ! – பேக் டு பேக் மாஸ்காட்டி அசத்தல்.

photo

டாப் நடிகர்களுடம் ஜோடிபோட்டு நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்த நடிகை ஜோதிகா தற்போது நல்ல கதையம்சம் கொண்ட படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அந்த வகையில் இவர் தற்போது பாலிவுட் பக்கம் சென்று அங்கு வெப் தொடர் ஒன்றில் கமிட்டாகிவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

photo

சமீபத்தில் இவர் மலையாளத்தில் நடிகர் மம்முட்டியுடன் ‘காதல் தி கோர்’ திரைப்படத்தில் நடித்தார், இந்த திரைப்படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது, விரைவில் படமும் ரிலீஸ்ஸாக உள்ளது. அடுத்து பாலிவுட்டில் ராஜ்குமார் ராவுடன் இணைந்து ‘ஸ்ரீ’ படத்தில் நடித்துள்ளார். இதன் தொடர்ச்சியாக ‘தாபா கார்டல்’ எனும் வெப் தொடர் ஒன்றில் கமிட்டாகியுள்ளார் ஜோ.

photo

ஐந்து குடும்ப பெண்களை மைய்யபடுத்தி தயாராக உள்ள இந்த வெப் தொடர், இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் தயாராக உள்ளது. இத்தொடரில் நடிகை ஜோதிகாவுடன் இணைந்து பிரபல இந்தி நடிகை ஷபானா ஆஸ்மி, இந்தி நடிகர் சுஜ்ராஜ் ராவ் ஆகியோரும் நடிக்கின்றனர். விரைவில் படப்பிடிப்பை தொடங்க உள்ள இந்த வெப் தொடரை, சோனாலி போஸ் இயக்க உள்ளார்.  
  

Share this story