ஆண் குழந்தைக்கு தாயான ஜாய் கிரிசில்டா..!

1

தன்னை திருமணம் செய்து கொள்வதாகக் கூறி ஏமாற்றி விட்டதாக ஆடை வடிவமைப்பு நிபுணரான ஜாய் கிரிசில்டா, பிரபல சமையல் கலைஞரான மாதம்பட்டி ரங்கராஜுக்கு எதிராக கடந்த சில மாதங்களுக்கு முன் போலீஸில் புகார் அளித்திருந்தார். இது தொடர்பாக சமூக வலைதளங்களில் பதிவிட்ட ஜாய் கிரிசில்டா, தொடர்ந்து தனக்கு நீதி வேண்டும் என்று முறையிட்டு வருகிறார்.

இதனிடையே, பிரபல காஸ்டியூம் டிசைனர் ஜாய் கிரிசில்டா ஆண் குழந்தைக்கு தாயாகியுள்ளார். இது குறித்து அவரே தனது சமூகவலைதள பதிவில் தெரிவித்துள்ளார். 


நாங்கள் ஆண் குழந்தைக்கு பெற்றோர் ஆகியிருக்கிறோம் என்று மாதம்பட்டி ரங்கராஜின் எக்ஸ் தள கணக்கை டேக் செய்து வழக்கம் போன்று #madhampattyrangaraj என்கிற ஹேஷ்டேகுடன் ட்வீட் செய்துள்ளார் ஜாய் கிரிசில்டா.

Share this story