தாதா சாகேப் பால்கே பயோபிக் படத்தில் நடிக்கும் ஜுனியர் என்டிஆர்?

நடிகர் ஜூனியர் என்டிஆர் இந்திய திரைப்படத் துறையின் தந்தை என அழைக்கப்படும் தாதாசாகேப் பால்கேவின் பயோபிக் தொடரில் நடிக்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் ஜூனியர் என்டிஆர் ஆர்ஆர்ஆர் திரைப்படத்தின் வெற்றிக்குப் பின் தனக்கென பெரிய மார்க்கெட்டை வைத்திருக்கிறார். தொடர்ந்து இவர் நடித்த தேவரா படம் அதிகமான வசூலைச் செய்தது. தற்போது, பிரசாந்த் நீல் இயக்கத்தில் நடித்து வருகிறார். இப்படம் அடுத்தண்டு திரைக்கு வரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், இயக்குநர் ராஜமௌலி மகன் கார்த்திகேயா தயாரிப்பில் மேட் இன் இந்தியா (made in india) என்கிற இணையத் தொடர் உருவாக உள்ளதாகவும் இது இந்திய திரைப்படத் துறையின் தந்தை என அழைக்கப்படும் தாதாசாகேப் பால்கே வாழ்க்கை வரலாற்றைப் பதிவு செய்யும் தொடர் என்றும் கூறப்படுகிறது.
இதில், தாதாசாகேப் பால்கே கதாபாத்திரத்தில் நடிகர் ஜூனியர் என்டிஆர் நடிக்க உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இத்தொடரின் படப்பிடிப்பு இந்தாண்டு இறுதியில் அல்லது அடுத்தாண்டு துவக்கத்தில் ஆரம்பமாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.