ஜூனியர் என்டிஆர் - பிரசாந்த் நீல் கூட்டணியில் உருவாகும் புதிய படத்தின் படப்பிடிப்பு தொடக்கம்

NTR

பிரசாந்த் நீல், ஜூனியர் என்டிஆர் நடிப்பில் உருவாகும் புதிய படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட்டுள்ளது. 

தெலுங்கு திரையுலகில் பிரபல நடிகராக வலம் வருபவர் ஜூனியர் என்டிஆர். இவரது நடிப்பில் கடந்த ஆண்டு தேவரா எனும் திரைப்படம் வெளியானது. அதைத்தொடர்ந்து ஜூனியர் என்டிஆர், கே ஜி எஃப் பட இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடிக்கப் போவதாக அறிவிக்கப்பட்டது. இந்த படம் ஜூனியர் என்டிஆரின் 31-வது படமாகும். அதன்படி தற்காலிகமாக NTR 31 (NTRNeel) என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ள இந்த படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனமும் நந்தமுரி தரகா ஆர்ட்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்கிறது.


பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாகும் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு மிகப்பெரிய அளவில் இருக்கும் நிலையில் இப்படமானது 2026 ஜனவரி 9ஆம் தேதி திரைக்கு வரும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருக்கிறது.அடுத்தது இந்த படத்தில் ஜூனியர் என்.டி.ஆர் உடன் இணைந்து ருக்மினி வசந்த் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என சொல்லப்படுகிறது. இந்நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு இன்று (பிப்ரவரி 20) தொடங்கப்பட்டிருப்பதாக படக்குழு புகைப்படம் ஒன்றை வெளியிட்டு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த தகவல் ஜூனியர் என்டிஆர் ரசிகர்களுக்கு உற்சாகத்தை தந்துள்ளது.

Share this story