நீதிபதி மகனை தாக்கிய வழக்கு; நடிகர் தர்ஷனுக்கு ஜாமின்!

dharshan

சென்னையில் நீதிபதியின் மகனை தாக்கிய நடிகர் தர்ஷனுக்கு அம்பத்தூர் நீதிமன்றம் ஜாமின் கொடுத்தது. இதனால் நாளை சிறையில் இருந்து விடுதலையாகிறார்.

பிக்பாஸ் பிரபலமும், நடிகருமான தர்ஷனின் வீடு சென்னை முகப்பேர் பகுதியில் உள்ள பாரி தெருவில் அமைந்துள்ளது. வீட்டின் அருகே தேநீர் கடை ஒன்று உள்ள நிலையில், உயர்நீதிமன்ற நீதிபதி கயல்விழியின் மகன் தனது மனைவியுடன் காரில் கடைக்கு வந்தார். அப்போது காரை தர்ஷனின் வீட்டு முன்பாக நிறுத்தியதாகவும், அது தொடர்பாக இருதரப்புக்கும் இடையே தகராறு ஏற்பட்டு கைகலப்பாக மாறியதாகவும் கூறப்படுகிறது.dharshan

காரில் வந்த நீதிபதியின் மகன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் இச்சம்பவம் தொடர்பாக காவல் துறையில் புகார் அளிக்கப்பட்டது. "தங்களிடம் தகாத வார்த்தைகளை கூறியதாகவும், தாங்கள் தாக்குதலில் ஈடுபடவில்லை" எனவும் தர்ஷன் விளக்கம் அளித்தார். இந்நிலையில், தாக்குதல் சம்பவம் தொடர்பாக நடிகர் தர்ஷன், அவரது சகோதரர் லோகேஷ் ஆகிய இருவர் கைது செய்யப்பட்டு, இருவர் மீதும் மூன்று பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்தது. தொடர்ந்து இருவரும் புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.

 
இந்நிலையில், இந்த வழக்கில் நடிகர் தர்ஷனுக்கு அம்பத்தூர் நீதிமன்றம் ஜாமின் கொடுத்தது. இதனையடுத்து புழல் சிறையில் இருந்து நாளை நடிகர் தர்ஷன் வெளியே வருவார் எனத் தெரிகிறது. இரண்டாவது முறையாக ஜாமின் கோரி தர்ஷன் அம்பத்தூர் நீதிமன்றத்தை நாடியிருந்த நிலையில், தற்போது அவருக்கு ஜாமின் கிடைத்துள்ளது.

Share this story