தேவரா பாகம்-1ன் படப்பிடிப்பை முடித்த ஜூனியர் என்.டி.ஆர்
நடிகர் ஜூனியர் என்.டி.ஆர் '' இயக்குநர் கொரட்டலா சிவா இயக்கத்தில் 'தேவரா பாகம் 1 படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் பாலிவுட் நடிகை ஜான்வி கபூர் நாயகியாக நடித்து வருகிறார். இதன்மூலம் அவர் தென்னிந்திய சினிமாவில் நடிகையாக கால் பதிக்கிறார்.இப்படத்தில் பிரகாஷ்ராஜ், சயிப் அலிகான் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார். இப்படம் பேன் இந்தியன் திரைப்படமாக உருவாகி வருகிறது. படத்தின் முதல் பாடலான ஃபியர் சாங் சமீபத்தில் வெளியாகி மக்கள் வரவேற்பை பெற்றது. தொடர்ந்து, இப்படத்தில் இரண்டாவது பாடலான 'சுத்தமல்லி' வெளியாகி அதுவும் நல்ல வரவேற்பை பெற்றது. இப்பாடலை காவாலா பாடலை பாடிய சில்பா ராவ் பாடியுள்ளார். இப்படம் வருகிற செப்டம்பர் 27 -ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.தேவராவின் படத்தின் படப்படிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், ஜூனியர் என்.டி.ஆர் தனது படப்பிடிப்பு பகுதியை முடித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Just wrapped my final shot for Devara Part 1. What a wonderful journey it has been. I will miss the ocean of love and the incredible team. Can’t wait for everyone to sail into the world crafted by Siva on the 27th of September. pic.twitter.com/RzOZt3VCEB
— Jr NTR (@tarak9999) August 13, 2024