சுனாமி போல் சீறி பாயும் ஜூனியர் என்டிஆர்.. ஃப்ர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு

devara

 ஜூனியர் என்டிஆர் நடிப்பில் உருவாகும் புதிய படத்தின் ஃப்ர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. 

தெலுங்கில் மிரட்டலாக திரைப்படங்களில் ஜூனியர் என்டிஆர் நடித்து வருகிறார். அந்த வகையில் ‘ஆர்.ஆர்.ஆர்’ படத்திற்கு பிறகு தனது 30வது படத்தில் தற்போது நடித்து வருகிறார். இந்த படத்தை ‘ஜனதா கேரேஜ்’ படத்தை இயக்கிய பிரபல தெலுங்கு இயக்குனர் கொரட்டலா சிவா இயக்கி வருகிறார். 

devara

இந்த படத்தில் வில்லனாக பாலிவுட் நடிகர் சையிப் அலிகானும், கதாநாயகியாக ஜான்வி கபூரும் நடித்து வருகின்றனர். தெலுங்கு, தமிழ், இந்தி என 5 மொழிகளில் பான் இந்தியா படமாக இப்படம் உருவாகிறது. இந்த படம் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் 5-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நந்தமுரி கல்யாண் ராம் உடன் இணைந்து சுதாகர் மிக்கிலினேனி இந்தப் படத்தைத் தயாரித்து வருகிறார்.  இந்த படத்திற்கு அனிரூத் இசையமைக்கிறார். சமீபத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் தலைப்பு மற்றும் ஃப்ர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி இப்படத்திற்கு ‘தேவாரா’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இதையொட்டி வெளியிடப்பட்டுள்ள போஸ்டரில் கடற்கரையில் மிரட்டலாக லுக்கில் ஜூனியர் என்டிஆர் உள்ளார். இந்த போஸ்டர் வரவேற்பை பெற்றுள்ளது. 

Share this story