ஜூனியர் என்டிஆரை டென்ஷனாக்கிய ரசிகர் -"வார் 2" மேடையில் நடந்த சம்பவம்

Junior NTR

ஜூனியர் என்டிஆர் குழந்தை நட்சத்திரமாக பிரம்மா ரிஷி விஸ்வாமித்ரா  மற்றும் ராமாயணம் போன்ற படங்களில் நடித்துள்ளார்.
 இவர் ஸ்டுடென்ட் நம்பர் 1  திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார்.
 பின்னர் அவர் ஆதி , சிம்ஹாத்ரி , யமதோங்கா , அடிர்தி , பிருந்தாவனம் , டெம்பர் , நான் ஈ வில்லன் , ஜனதா கேரேஜ் ,  ஆர்.ஆர்.ஆர் போன்ற பல வெற்றிப் படங்களில் நடித்துள்ளார்.
இவர்  திரைப்படங்களுக்காக பல விருதுகளையும் பெற்றுள்ளார்
தெலுங்கு முன்னணி ஹீரோ ஜூனியர் என்டிஆர் பாலிவுட்டில் அறிமுகமாகும் படம், ‘வார் 2’. இப்படம் சம்பந்தமான நிகழ்ச்சி ஐதராபாத்தில் நடந்தது. அப்போது ஜூனியர் என்டிஆர் பேசினார். ஆனால், அவரை தொடர்ந்து பேசவிடாமல் ஒரு ரசிகர் இடையூறு செய்தார். அதாவது, ஜூனியர் என்டிஆர் பேசினால், கூடவே அந்த ரசிகர் ஏதோ ஒன்றை சொல்லிக் கொண்டிருந்தார்.
இதனால் ஆவேசம் அடைந்த ஜூனியர் என்டிஆர், ‘நான் தொடர்ந்து பேசட்டுமா? இல்லை, இந்த மேடையை விட்டு கிளம்பட்டுமா? மைக்கை கீழே வைத்துவிட்டு வெளியே செல்ல எனக்கு ரொம்ப நேரமாகாது. அமைதியாக இருங்கள்’ என்று சொன்ன பிறகே அந்த ரசிகர் உள்பட சிலரது சலசலப்பு பேச்சு அடங்கியது. இது அந்த அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Share this story