பிரபல நடிகர் 'ஜூனியர் பாலையா' காலமானார்.

photo

பிரபல நடிகரான ஜூனியர் பாலையா இன்று அதிகாலை காலமானார். அவருக்கு வயது 70. பழம்பெரும் நடிகரான டி.எஸ் பாலையாவின் மகன் ரகு. இவர் சினிமாவுக்காக தனது பெயரை ஜூனியர் பலையா என மாற்றிக்கொண்டார். ‘மேல்நாட்டு மருமகள்’ என்ற படத்தில் நடித்து தமிழில் அறிமுகமான ஜூனியர் பலையா கோபுர வாசலிலே, கரகாட்டக்காரன், சங்கமம், வின்னர் சின்னத்தாயி, அஜித்தின் நேர்கொண்ட பார்வை உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இவர் திரைப்படங்கள் மட்டுமல்லாமல்  சித்தி, சின்ன பாப்பா பெரிய பாப்பா உள்ளிட்ட சீரியல்களிலும் நடித்துள்ளார்.

photo

ஜூனியர் பாலையா ‘என்னங்க சார் உங்க சட்டம்’ என்ற படத்தில் கடைசியாக நடித்தார். அதன் பிறகு நடிக்கவில்லை இந்த நிலையில் இன்று காலை வயது மூப்பு காரணமாக மூச்சு திணறல் ஏற்பட்டு அவரது இல்லத்தில் காலமானார். தொடர்ந்து அவரது உடல் வளசரவாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. சினிமாதுறையை சார்ந்த பலரும் ஜூனியர் பாலையாவின் உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

 

Share this story