ஜோதிகாவின் பொன்மகள் வந்தாள் படத்தால் வெளிவந்த சிறுமிக்கு நடந்த கொடுமை... படக்குழுவினருக்கு குவியும் பாராட்டு!

பொன்மகள் வந்தாள் படத்தால் ஏற்பட்ட பாதிப்பு தற்போது வைரலாகி வருகிறது.
ஜோதிகா நடிப்பில் வெளியான பொன்மகள் வந்தாள் திரைப்படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றது. அதில் ஜோதிகாவின் மகள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாவதாக இருக்கும். இந்நிலையில் அந்தப் படத்தில் தாயிடம் எந்த விஷயத்தையும் மறைக்கக் கூடாது என்று காட்சி இடம் பெற்றிருக்கும். அந்தக் காட்சியைப் பார்த்த சிறுமி தனக்கு பாலியல் தொல்லை கொடுத்த உறவினர் பற்றி சிறுமி தாயிடம் கூற அவர்கள் போலீசில் புகார் அளித்துள்ளனர். போலீசில் புகாரளிக்கப்பட்டு ஒரே ஆண்டில் இந்த வழக்கில் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
சென்னை ராயபுரத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. 9 வயது சிறுமி தனக்கு பாலியல் தொல்லை கொடுத்த 48 வயது உறவினர் குறித்து பொன்மகள் வந்தாள் படத்தைப் பார்த்து பெற்றோரிடம் கூட அவர்கள் புகார் அளித்த ஓராண்டிற்குள் நடவடிக்கை எடுக்கப்பட்டு 5 ஆண்டு சிறை தண்டனை கொடுக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து பொன்மகள் வந்தாள் படக்குழுவினருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.