'காதல் என்பது பொதுவுடமை'... 'ஜெய் பீம்' நடிகையின் பட போஸ்டர் வெளியிட்ட ஜோதிகா !

 leomol

'ஜெய் பீம்' நடிகை லிஜோமோல் நடித்துள்ள 'காதல் என்பது பொதுவுடமை' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகை ஜோதிகா வெளியிட்டுள்ளார். 

சினிமாவில் இளம் நடிகையாக இருக்கும் நடிகை லிஜோமோல், 'ஜெய் பீம்' படத்தின் மூலம் பிரபலமானவர். மலையாளத்தில் கடந்த கடந்த 2016-ஆம் ஆண்டு வெளியான 'மகேஷிண்டே பிரதிகாரம்' படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். அதன்பிறகு தொடர்ந்து மலையாள திரைப்படங்களில் நடித்து வந்தார். இந்த படங்கள் மூலம் பெரிதாக லிஜோமோல் ரசிகர்களை கவரவில்லை. 

lijomol

பின்னர் கடந்த 2019-ஆம் ஆண்டு தமிழில் பிரபல இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் மற்றும் சித்தார்த் இணைந்த  நடித்த 'சிவப்பு மஞ்சள் பச்சை' படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். அதில் ஜிவி பிரகாஷின் சகோதரியாக நடித்திருந்தார். இதையடுத்து சூர்யாவின் 'ஜெய் பீம்' படத்தில் நடித்தார். செங்கேணி என்ற கதாபாத்திரத்தில் நடித்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். 

இந்நிலையில் 'காதல் என்பது பொதுவுடமை' படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடிகை லிஜோமோல் நடித்துள்ளார்.  ‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌இந்த படத்தை லென்ஸ், தலைகோதல் ஆகிய படங்களை இயக்கிய ஜெயபிரகாஷ் ராதாகிருஷ்ணன் இயக்கி வருகிறார். இந்த படத்தில் ரோகிணி, வினித், அனிஷா, தீபா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். 

இந்நிலையில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகை ஜோதிகா வெளியிட்டுள்ளார். இது குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ள அவர், காதல் என்பது இரண்டு பாலினம் சார்ந்தது அல்ல. அது இரண்டு இதயங்கள் சார்ந்தது என்று கூறியுள்ளார். 

 

Share this story