“250 பேர் மத்தியில் ரொமான்ஸ் செய்வது கடினம்! நான் ஹீரோவாகலாம் மாறவில்லை”- காளி வெங்கட்

நடிகர் காளி வெங்கட் நடிப்பில் வெளியான மெட்ராஸ் மேட்னி திரைபடத்தின் நன்றி தெரிவிக்கும் விழா சென்னை வடபழனியில் உள்ள பிரசாத் லேபில் நடைபெற்றது. தில் படக்குழுவினர் பங்கேற்று சிறப்புரையாற்றினர்.
நிகழ்ச்சியில் பேசிய நடிகர் காளி வெங்கட், “இந்த படம் இதைவிட வெற்றி பெறும் என நம்பிக்கை உள்ளது.ஹார்ட் - ல மட்டும் தான் அழுகையை உணரமுடியும். இந்த படத்தில் எனக்கு மறக்க முடியாத அனுபவம். இந்த படத்தை பார்த்த ரசிகர்கள் கண்ணீர் மல்க கட்டியணைத்து பாராட்டினர். சினிமா துறையில் மட்டும் தான் ஒருவரின் அழுகையை ரசிக்க முடியும், வேறு எந்த துறையிலும் ஒருவரின் அழுகையை ரசிக்க முடியாது. இந்த வரம் கிடைத்து எனது பாக்கியம். எனக்கு இந்த கதையை கேட்கும் போது அப்பா சட்டை வாசனை அடித்தது. இந்த மாதிரியான படங்களும் தமிழ் சினிமாவிற்கு முக்கியம்.
எத்தனை நாட்கள் மலையாள படம், மலையாள படம் என்று சொல்லி வெறுப்பேற்றுவார்கள். நான் யாரையும் குறிப்பிட்டு சொல்லவில்லை. தமிழ் சினிமாவில் இதுபோன்ற பொதுவான வதந்தி ஒன்று உள்ளது. எனக்கும் மலையாள படங்கள் பிடிக்கும், நானும் நிறைய படங்களை பார்பேன். அதில் இருந்தும் ரெஃபரன்ஸ் எடுத்து கொள்வேன். மலையாள படங்களை பற்றி மட்டுமே பேசிக்கொண்டிருக்கும் நேரத்தில் இதுமாதிரியான படங்களை எடுத்தற்கு இயக்குனருக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். ஒரு கதாபாத்திரத்தை எவ்வளவு உள்வாங்கி நடிக்கிறோம் என்பது தான் முக்கியமானது.. நான் எல்லா கதாபாத்திரத்தையும் பண்ணுவேன். நான் ஹீரோவாகலாம் மாறவில்லை. எனக்கு நெருக்கமான ரொமான்ஸ் காட்சிகள் நடிக்க ஆசை தான்.. அதெல்லாம் இயக்குனர் கையில் தான் உள்ளது. அதேபோல ரொமான்ஸ் காட்சிகள் நடிப்பது என்பது கொடுமையான விஷயம்.. ஒரு படப்பிடிப்பு தளத்தில் 250 பேர் மத்தியில் ரொமான்ஸ் செய்வது கடினம்” என்றார்.