'காத்து வாக்குல ஒரு காதல்' படத்தின் பாடல் வெளியீடு

KVOK

'காத்து வாக்குல ஒரு காதல்' படத்தில் லட்சுமி பிரியா மற்றும் மஞ்சுளா என இரண்டு கதாநாயகிகள் நடித்துள்ளனர்.
  
மாஸ் ரவி பூபதி இயக்கி நடித்திருக்கும் படம் 'காத்து வாக்குல ஒரு காதல்'. இப்படத்தில் லட்சுமி பிரியா மற்றும் மஞ்சுளா என இரண்டு கதாநாயகிகள் நடித்துள்ளனர். இவர்களுடன் சூப்பர் சுப்பராயன், சாய் தீனா, சத்தியா, கல்லூரி வினோத், ஆதித்யா கதிர், தங்கதுரை, பவர் ஸ்டார் சீனிவாசன், கபாலி விஸ்வந்த், மேனக்சன் மீப்பு, மொசக்குட்டி பிரியதர்ஷினி, பிரியங்கா ரோபோ சங்கர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.


இப்படத்திற்கு ராஜதுரை ஒளிப்பதிவு செய்ய, ஜி.கே.வி இசையமைத்துள்ளார். வடசென்னை பின்னணியில், தற்போது இளம் பெண்களின் வாழ்க்கை சமூக வலைதளங்களில் எப்படி சீரழிகிறது என்பதை சுட்டிக்காட்டும் வகையில் இப்படத்தை படமாக்கி இருக்கின்றனர்.இந்நிலையில் இப்படத்தின் 3வது பாடலான 'நான் உன்னை பிரியேன்' வெளியாகி இருக்கிறது. ஏற்கனவே 'காத்து வாக்குல ரெண்டு காதல் ' படத்தில் விஜய் சேதுபதி நாயகனாகவும், நயன்தாரா, சமந்தா என இரு நாயகிகள் நடித்த படம் ரசிகர்களுக்கு டபுள் டிரீட்டாக அமைந்தநிலையில், தற்போது அதேபோல் 'காத்து வாக்குல ஒரு காதல்' படத்திலும் காதலை மையமாகக் கொண்டு இரண்டு நாயகிகளும், ஒரு நாயகனும் நடித்துள்ளனர்.

Share this story