'கடைசி உலகப் போர்' படத்திலிருந்து 'உனக்காக' பாடல் வெளியீடு.. !
ஹிப் ஹாப் ஆதி, சுந்தர் சி இயக்கத்தில் விஷால் நடிப்பில் வெளியான ஆம்பள திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். பின் தனி ஒருவன், ஆம்பள, வணக்கம் சென்னை, கதகளி, கவண், இமைக்கா நொடிகள், அரண்மனை போன்ற பல படங்களுக்கு இசையமைத்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.கடந்த மே மாதம் வெளியான அரண்மனை 4 திரைப்படத்திற்கும் ஹிப் ஹாப் ஆதி இசையமைத்திருந்தார். அதேசமயம் நடிப்பதிலும் ஆர்வமுடைய இவர் மீசைய முறுக்கு என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக உருவெடுத்தார். அதைத் தொடர்ந்து நட்பே துணை, வீரன் போன்ற படங்களிலும் நடித்தார்.கடைசியாக ஹிப் ஹாப் ஆதி நடித்திருந்த பிடி சார் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் பெரும் வரவேற்பு பெற்று மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்தது.
#Unakaga music video is out now ! #kadaisiUlagaPor will be in theatres in September 😁🤟🏻 pic.twitter.com/b1NqdO1lOH
— Hiphop Tamizha (@hiphoptamizha) August 22, 2024
#Unakaga music video is out now ! #kadaisiUlagaPor will be in theatres in September 😁🤟🏻 pic.twitter.com/b1NqdO1lOH
— Hiphop Tamizha (@hiphoptamizha) August 22, 2024
ஹிப் ஹாப் ஆதி தற்போது 'கடைசி உலகப் போர்' எனும் புதிய படத்தில் நடித்து வருகிறார். படத்தில் நாசர், நட்டி , அனகா, அழகன் பெருமாள், ஹரிஷ் உத்தமன்,முனிஷ்காந்த், சிங்கம்புலி, இளங்கோ குமரவேல், தலைவாசல் விஜய், மகாநதி சங்கர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.போர் சம்பந்தமான கதைக்களத்தில் உருவாகி இருக்கும் இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் கிலிம்ப்ஸ் வீடியோ வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தை ஹிப் ஹாப் ஆதி, ஹிப் ஹாப் தமிழா என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் மூலம் தயாரித்து இயக்குவதோடு மட்டுமல்லாமல் படத்திற்கு இசையும் அமைத்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே நிறைவடைந்த நிலையில் படமானது 2024 செப்டம்பர் மாதத்தில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.இந்நிலையில் இந்த படத்தின் 3-வது பாடல் வெளியாகி உள்ளது. படத்தின் "உனக்காக" 3-வது பாடலாக வெளியாகி உள்ளது.