கடைசி உலகப் போர் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

Hip hop aadhi
ஹிப்ஹாப் ஆதி இன்றைய இளம் சமூதாயத்திற்கு பிடித்தமான இசையமைப்பாளராவர். அவர் இசையமைத்த பல பாடல்கள் சூப்பர் டூப்பர் ஹிட்டாகியுள்ளது. இசையமைப்பது மட்டுமல்லாமல் கதாநாயகனாகவும் நடித்து வருகிறார். கடைசியாக கார்த்திக் வேணுகோபால் இயக்கிய பி.டி சார் திரைப்படத்தில் நடித்து இருந்தார். இப்படம் மக்களிடையே மிகப் பெரிய வரவேற்பை பெற்று வெற்றிப் பெற்றது. தற்பொழுது அடுத்ததாக `கடைசி உலகப் போர்' படத்தை இயக்கி, நடித்து அப்படத்தை தயாரித்தும் உள்ளார்.இப்படத்தை ஆதியின் ஹிப்ஹாப் தமிழா எண்டர்டெயின்மண்ட் தயாரித்துள்ளது. படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் கிலிம்ப்ஸ் வீடியோ சில வாரங்களுக்கு முன் வெளியானது. படத்தின் ப்ரோமோ பாடலான பூம்பாஸ்டிக் என்ற பாடலின் வீடியோ படக்குழுவினர் வெளியிட்டனர். பாடல் ரசிகர்களால் மிகவும் வரவேற்கப்பட்டது.இப்படத்தில் நாசர், நட்டி நட்ராஜ், முனிஷ்காந்த், ஷா ரா, அனாகா, அழகம் பெருமாள், சிங்கம்புலி, குமரவேல், தலைவாசல் விஜய் மற்றும் பலர் நடித்துள்ளனர். படத்தின் ரிலீஸ் தேதி குறித்து படக்குழு தற்பொழுது அறிவித்துள்ளனர். திரைப்படம் வரும் செப்டம்பர் 20 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

Share this story