பிரம்மாண்டமாக நடைபெற்ற இசை வெளியீடு. ‘காதல் condition’... புகைப்படங்கள் வெளியீடு

mahat trailer
நடிகர் மகத் நடிப்பில் உருவான  ‘காதல் Condition apply’ படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. 

தமிழ் சினிமாவில் இளம் நடிகராக உள்ள மகத், ‘மங்காத்தா’ படத்தின் மூலம் பிரபலமானவர். இந்த படத்திற்கு முன்பே, சிம்புவின் நடிப்பில் வெளியான வல்லவன், காளை, பிரியாணி, வடகறி, சென்னை 28 -2, அன்பானவன் அடங்காதன் அசராதவன், வந்தா ராஜாவாத்தான் வருவேன், ஜில்லா உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். 

mahat trailer

முன்னணி ஹீரோக்களின் திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வந்த மகத், ‘காதல் Condition apply’ என்ற படத்தில் ஹீரோவாக நடித்துள்ளார். இந்த படத்தை ஆர்.அரவிந்த் என்பவர் இயக்கியுள்ளார். இந்த படத்தில் கதாநாயகியாக சனா மக்புல் நடித்துள்ளார். இவர்களுடன்  திவ்யதர்ஷினி, விவேக் பிரசன்னா, அபிஷேக், மகேஸ்வரி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். 

இந்த படத்தை நிதின் சத்யாவின் ஷ்வேத் தயாரிப்பு நிறுவனமும், ரவீந்தர் சந்திரசேகரனின் லிப்ரா புரொடக்ஷன்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ளனர். இந்நிலையில் இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா இன்று பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதில் படக்குழுவினர் பலர் கலந்துகொண்டனர். 

Share this story