மனதை உறைய வைக்கும் ‘சிந்தி சிதறி’ பாடல்... ‘காதல் Condition apply’ ஃப்ர்ஸ்ட் சிங்கிள் வெளியீடு

இளம் நடிகராக உள்ள மகத், மங்காத்தா, பிரியாணி, வடகறி, சென்னை 28 -2, அன்பானவன் அடங்காதன் அசராதவன், வந்தா ராஜாவாத்தான் வருவேன், ஜில்லா உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானவர். தற்போது முதல்முறையாக ‘காதல் Condition apply’ படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகியுள்ளார்.
இந்த படத்தில் கதாநாயகியாக சனா மக்புல் நடித்துள்ளார். இவர்களுடன் திவ்யதர்ஷினி, விவேக் பிரசன்னா, அபிஷேக், மகேஸ்வரி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்த படத்தை ஆர்.அரவிந்த் என்பவர் இயக்கியுள்ளார். இந்த படத்தை நிதின் சத்யாவின் ஷ்வேத் தயாரிப்பு நிறுவனமும், ரவீந்தர் சந்திரசேகரனின் லிப்ரா புரொடக்ஷன்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ளனர்.
சமீபத்தில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் பிரம்மாண்டமாய் நடைபெற்றது. இந்நிலையில் இப்படத்திலிருந்து முதல் பாடலான ‘சிந்தி சிதறி’ என்ற பாடல் வெளியிடப்பட்டுள்ளது. மனதை உருக வைக்கும் இந்த பாடலை நித்யஸ்ரீ வெங்கட்ராமன் மற்றும் சாண்டி இணைந்து பாடியுள்ளனர். ரமேஷ் தமிழ் இசையில் உருவாகியுள்ள இந்த பாடலை சந்திர சூட் எழுதியுள்ளார். இந்த மெலோடி பாடல் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.