'காதலிக்க நேரமில்லை' படத்தின் ஓடிடி ரிலீஸ் அப்டேட்...!

ரவி மோகனின் ‘காதலிக்க நேரமில்லை' படம் வரும் 11ஆம் தேதி NETFLIX OTT தளத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
’பிரதர்’ படத்தை தொடர்ந்து ரவி மோகன் நடிப்பில் வெளியான படம் 'காதலிக்க நேரமில்லை'. இதில், நித்யா மேனன், யோகி பாபு, லால், வினய், லட்சுமி கிருஷ்ணன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். "வணக்கம் சென்னை" திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான கிருத்திகா உதயநிதி இப்படத்தை இயக்கி உள்ளார். ஏ.ஆர்.ரகுமான் இசை அமைத்திருக்கும் இப்படத்தை ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.
ரொமான்டிக் காதல் கதைக்களத்தில் உருவாகி இருக்கும் இத்திரைப்படம் பொங்கல் பண்டிகை அன்று திரையரங்குகளில் வெளியானது. இந்த நிலையில், 'காதலிக்க நேரமில்லை' படம் வரும் 11ஆம் தேதி NETFLIX OTT தளத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.