'காதலிக்க நேரமில்லை' படத்தின் 2வது பாடல் அப்டேட்.. !

jayam ravi

‘காதலிக்க நேரமில்லை’ படத்தின் ‘லேவண்டர் நிறமே’ பாடல் நாளை மாலை 5 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. 
ரெட் ஜெயன்ட் மூவிஸ் தயாரிப்பில் இயக்குநர் கிருத்திகா உதயநிதி இயக்கும் புதிய படம் காதலிக்க நேரமில்லை. இந்தப் படத்திற்கு ஏ.ஆர். ரகுமான் இசையமைத்துள்ளார்.இந்தப் படத்தில் ஜெயம் ரவி, நித்யா மேனன் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க அவர்களுடன் யோகி பாபு, லால், வினய், லக்ஷ்மி ராமகிருஷ்ணன், பாடகர் மனோ, TJ பானு, ஜான் கோகேன், வினோதினி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். கேவ்மிக் ஆரி ஒளிப்பதிவில் உருவாகும் இப்படத்திற்கு லாரன்ஸ் கிஷோர் படத்தொகுப்பை மேற்கொள்கிறார். காதலிக்க நேரமில்லை படத்தின் முதல் பாடல் `என்னை இழுக்குதடி' சில வாரங்களுக்கு முன் வெளியானது.

ஏ.ஆர். ரகுமான் மற்றும் தீ இணைந்து பாடியுள்ள என்னை இழுக்குதடி பாடல் சமூக வலைத்தளங்களில் வைரலாகி, இதுவரை 10 மில்லியன் பார்வைகளை யூடியூபில் கடந்துள்ளது. அதன் தொடர்சியாக அப்பாடலின்  மேக்கிங் வீடியோவை படக்குழு பகிர்ந்தது. இந்நிலையில், ‘காதலிக்க நேரமில்லை’ படத்தின் ‘லேவண்டர் நிறமே’ பாடல் நாளை மாலை 5 மணிக்கு வெளியாகும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

Share this story