'காதலிக்க நேரமில்லை' படத்தின் இசை வெளியீட்டு விழா அப்டேட்

jayam ravi
ஜெயம் ரவி மற்றும் நித்யா மேனன் நடித்துள்ள 'காதலிக்க நேரமில்லை' படம் அடுத்த மாதம் வெளியாக உள்ளது.கோலிவுட்டில் வளர்ந்து வரும் இயக்குனர்களில் குறிப்பிடத்தக்கவர் கிருத்திகா உதயநிதி. கோலிவுட்டில் "வணக்கம் சென்னை" என்ற திரைப்படத்தை இயக்கி இயக்குனராக அறிமுகமானார். நீண்ட இடைவெளிக்கு பிறகு கிருத்திகா உதயநிதி இயக்கியிருக்கும் புதிய திரைப்படம் தான் 'காதலிக்க நேரமில்லை'.இத்திரைப்படத்தில் ஜெயம்ரவி நாயகனாக நடிக்க நித்யா மேனன், யோகி பாபு, லால், வினய், லட்சுமி கிருஷ்ணன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். jayam raviபடத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசை அமைத்திருக்கிறார். ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் படத்தை தயாரித்துள்ளது. இந்த படம் ரொமான்டிக் காதல் கதைக்களத்தில் உருவாகி வருகிறது. இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்றதாக படக்குழு அண்மையில் அறிவித்திருந்தது. இந்தநிலையில் இப்படம் வருகிற டிசம்பர் மாதம் 20-ந் தேதி வெளியாக உள்ளதாக கூறப்படுகிறது. தற்போது இப்படத்தின் இசை வெளியீட்டு விழா குறித்த தகவல் வெளியாகிருக்கிறது. அதாவது காதலிக்க நேரமில்லை படத்தின் இசை வெளியீட்டு விழா இந்த மாதம் இறுதியில் நடைபெறும் என புதிய அப்டேட் வெளிவந்துள்ளது. மேலும் மற்ற அப்டேட்டுகள் இனிவரும் நாட்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 

Share this story