என்ன ஒரு அழகான பயணம் ! – 6 ஆண்டுகளுக்கு பின் ஒன்று கூடிய “ தி எலிஃபண்ட் விஸ்பரர்ஸ்" குடும்பம்.

photo

95 வது ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில்,  சிறந்த  ஆவணப்படத்திற்கான விருதை தட்டி சென்ற ' தி எலிஃபண்ட் விஸ்பரர்ஸ்' படத்தின் இயக்குநரான கார்த்திகி கோன்சால்வ்ஸ் வெளியிட்டுள்ள புகைப்படம் இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

photo

யானைகள் பொம்மி மற்றும் ரகு உட்பட ஆவணப்படத்தின் முழு நடிகர்களும் ஆஸ்கார் விருதுடன் போஸ் கொடுக்கும் படத்தை இயக்குனர் கார்த்திகி கோன்சால்வ்ஸ் வெளியிட்டு தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார். அந்த பதிவில் அவர் கூறியதாவது, " ஆறு ஆண்டுகளுக்கு பிறகு எல்லாம் துவங்கிய இடத்தில் மீண்டும் முழு குடும்பமும் இணைந்துள்ளோம்" என ஆஸ்கார் விருதுடன் ரகு மற்றும் பொம்மி என்ற யானைகளுக்கு முன்னால் நின்றபடி பொம்மி, பெல்லியுடன் இணைந்து கார்த்திகி ஆஸ்கார் கோப்பையை வைத்துள்ளார்கள், என்ன ஒரு அழகான பயணம்.

photo

உணர்வுகள் நிறைந்து மிக அழகாக எடுக்கப்பட்ட இந்த படத்திற்கு பல தரப்பிலிருந்தும் பாராட்டுகள் குவிந்து வருகிறது. சமீபத்தில் கூட பிரதமர் நரேந்திர  மோடி இந்த தம்பதிகளை சந்தித்து வாழ்த்துகள் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Share this story